

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியப்பபிள்ளைபட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 21). இவர், 17 வயது சிறுமியை காதலித்ததாக தெரிகிறது. அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.