இளைஞர்கள் கிராமங்களை தத்தெடுத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கூடுதல் தலைமை இயக்குனர்

இளைஞர்கள் கிராமங்களை தத்தெடுத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் பேசினார்.
இளைஞர்கள் கிராமங்களை தத்தெடுத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கூடுதல் தலைமை இயக்குனர்
Published on

நாமக்கல்,

இளைஞர்கள் கிராமங்களை தத்தெடுத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் மாரியப்பன் பேசினார்.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், சேலம் மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நாமக்கல் அருகே எர்ணாபுரத்தில் உள்ள சி.எம்.எஸ். பொறியியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. கல்லூரியின் தாளாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

இந்திய அரசு கள விளம்பர உதவி அலுவலர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டு தூய்மை இந்தியா குறித்து நடத்தப்பட்ட, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கினார்.

பின்னர் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் மாரியப்பன் திட்டம் குறித்த கையேட்டை வெளியிட்டதோடு, அதை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

நாடு முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார். மத்திய அரசின் மக்கள் தொடர்பு அமைப்புகள், தூய்மையின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தி வருவதால் பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ முடிகிறது. திறந்தவெளி இடங்களில் கழிப்பிடம் செல்லும் பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. நகரம், கிராமங்களில் மானியங்கள் அளித்து கழிப்பிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. பொது இடங்களை சுத்தமாக வைப்பதில் பொதுமக்களின் பங்கு மிக முக்கியம்.

இளைஞர்கள் கிராமங்களை தத்தெடுத்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். சமுதாய பொறுப்புணர்வு பொதுமக்களுக்கும் இருக்க வேண்டும். இதன்மூலம் நோய் இல்லாமல் வாழ முடியும். கள விளம்பரத் துறை நாடு முழுவதும் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தினர், கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com