திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் பழுதடைந்த கடைகள் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியினை கலெக்டர் பார்வையிட்டார்.
Published on

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டத்தில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதையொட்டி திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று அரசு அறிவுறுத்தியுள்ளபடி சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா? என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் திருச்செங்கோடு நகராட்சி பழைய பஸ் நிலைய வளாகத்தில் பழுதடைந்த கடைகள் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியினை கலெக்டர் பார்வையிட்டார்.

முன்னதாக திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.

திருச்செங்கோடு நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.83.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதையும், திருச்செங்கோடு நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தித்திட்ட பணிகளுக்காக சந்தைபேட்டை பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால், நகராட்சி பொறியாளர் குணசேகரன் உள்பட அரசு துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com