மருத்துவர்கள் தினம்: "பேரிடரிலும் கனிவோடு கடமையாற்றும் மருத்துவர்கள்" - அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து

கொரோனா பேரிடரிலும், தன்னுயிருக்கு அஞ்சாமல், கனிவோடு, கடமையாற்றும் மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
Published on

சென்னை,

நாடு முழுவதும் தன்னலம் கருதாமல் சேவையாற்றி வரும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது உலகையே உலுக்கி வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் தினமான இன்று தன்னுயிருக்கு அஞ்சாமல், கனிவேடு, கடமையாற்றும் மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார்:-

கண்கள் உறங்குவதும்

இதயம் உறங்காமல் இருப்பதும்

மருத்துவக் கடவுள்களின்

மகத்துவப் பணியால்

நரம்புகளில் கருணையை நிரப்பி

நாடித்துடிப்பில் சேவையை நிறுத்தி

தன்னுயிருக்கு அஞ்சாது

பெருந்தொற்று பரவிய பேரிடர் காலத்திலும் கனிவோடு கடமையாற்றும் மருத்துவர்களுக்கு

மருத்துவர்தினவாழ்த்துக்கள்

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com