பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் கஹ்னுவான் பகுதியில் சத்யாலி கால்வாய் உள்ளது. இதன் முன் நின்று செல்பி எடுக்கும் பொழுது 2 டீன் ஏஜ் பெண்கள் நேற்று நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, லவ்பிரீத் கவுர் (வயது 19) மற்றும் நிஷா (வயது 18) என்ற அந்த 2 பெண்களையும் தேடும் பணியில் போலீசார் மற்றும் மீட்பு பணியினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், அவர்களுடன் சென்ற லவ்பிரீத் சகோதரி சோபியா (வயது 17) போலீசாரின் விசாரணையில் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை தந்துள்ளது.
அவர்கள் இருவரும் கால்வாயில் மூழ்கவில்லை. உண்மையில், யாரோ சிலருடன் வாகனத்தில் தப்பியோடி விட்டனர் என சோபியா கூறியுள்ளார்.
எனினும், அந்த 2 பேரும் வீட்டை விட்டு தப்பி செல்லும்பொழுது உடனிருந்த சோபியா வாகனத்தினை அடையாளம் காணவில்லை என தெரிவித்து;ளளார். அவர்கள் சோபியாவிடம், கால்வாயில் அடித்து செல்லப்பட்டனர் என பெற்றோரிடம் கூறிவிடும்படி கேட்டு கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
எங்கள் முதல் பணி 2 பேரையும் தேடுவதே என கூறியுள்ள போலீசார் காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவர்களை தேடும் பணி தொடருகிறது.