பொருளாதாரத்தை மேம்படுத்த மினி பட்ஜெட்டை அறிவிக்க உள்ள இங்கிலாந்து அரசு

நீண்டகால கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்த இங்கிலாந்து அரசு புதன்கிழமை மினி பட்ஜெட்டை அறிவிக்க உள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்த மினி பட்ஜெட்டை அறிவிக்க உள்ள இங்கிலாந்து அரசு
Published on

லண்டன்

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. கொரோனாவால் உலகளவில் சுகாதார நெருக்கடி மட்டுமின்றி பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரித்தானியா பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் சரிந்துவிட்டது என்று தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) கூறுகிறது.

இந்த நிலையில், உள்கட்டமைப்பு செலவினங்களை மையமாகக் கொண்ட இந்த திட்டத்தை அறிவிக்கப்பட உள்ளது. வீட்டு காப்பு மேம்படுத்துவதற்காக வீடுகளுக்கு 2 பில்லியன் பவுண்டுகள் மானியங்கள் வழங்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் 1 பில்லியன் பவுண்டுகள் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது கட்டிடங்களுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com