சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை விழா பக்தர்களுக்கு அன்னதானம்

சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் நடைபெற்ற குருபூஜை விழாவையொட்டி மலைபோல் சாதம் குவித்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. சித்த மருத்துவராக இருந்து பொதுமக்களுக்கு பணி புரிந்து வந்த இவரை, இந்த பகுதி மக்கள் இன்றளவும் வாத்தியார் ஐயா என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆடி மாதம் ரோகினி நட்சத்திர தினத்தன்று சித்தர் முத்து வடுகநாதர் நல்லாகுளம் வடகரையில் ஜீவ சமாதி அடைந்தார். அன்று முதல் சித்தர் ஸ்ரீ முத்து வடுகநாத சாமி என அழைக்கப்பட்டு வருகிறார். ஆண்டுதோறும் அவருடைய குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 185-வது ஆண்டு குருபூஜை விழா நேற்று அருணாச்சலம் தேசிகர், வாரிசுதாரர்கள் சார்பில் நடைபெற்றது.

இதையொட்டி காலையில் சிறப்பு பூஜை மற்றும் 21 வகையான வாசனை திரவியங்கள், பால், பன்னீர், பழ வகை உள்ளிட்ட பொருட்களால் சித்தர் முத்துவடுகநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராத னை நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அன்னதான பந்தலில் அரிசி சாதம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டது.

அதில் அன்னலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் 5 வகை காய்கறிகளுடன் 1000 கிலோ அரிசி மற்றும் 3 ஆயிரம் கிலோ காய்கறிகளுடன் சமையல் செய்யப்பட்டு சுமார் 18 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று சிங்கம்புணரி வர்த்தக சங்கம் சார்பில் இதேபோல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com