வாக்காளர் பட்டியலில் 11 இடங்களில் இடம்பெற்ற ஒரே நபர் பெயர்

வாக்காளர் பட்டியலில் 11 இடங்களில் ஒரே நபரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் 2019-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கடந்த மாதம் 23-ந் தேதி வெளியிட்டார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 9 லட்சத்து 24 ஆயிரத்து 897 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 64 ஆயிரத்து 646 பெண் வாக்காளர்களும், 79 மாற்று பாலினத்தவர்களும் என மொத்தம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் 912 மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி திருத்தம் போன்ற சுருக்க திருத்த முகாம் கடந்த 2 நாட்களாக நடந்தது.

ஈரோடு மாநகராட்சி 18-வது வார்டில் பாகம் 109-ல் முனியப்பன் கோவில் வீதி, நேதாஜி நகர், வி.என்.எம். சின்னகவுண்டர்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் வரிசை எண் 42-ல் இருந்து 52 வரை வெங்கடாசலத்தின் மகன் ரகுபதி (வயது 56) என்ப வரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதே தவறு ஏற்கனவே வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அப்போது அரசியல் கட்சியினர் தர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்து இருந்தனர். ஆனால் மீண்டும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயர் 11 இடங்களில் உள்ளது. எனவே இந்த தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com