

புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தள முகப்பு பட பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து டெல்லி மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆம் ஆத்மி தலைவர்களும், தொண்டர்களும் எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளில் தங்களது பழைய படத்தை மாற்றிவிட்டு, 'மோடியின் மிகப்பரிய பயம் கெஜ்ரிவால்' என்ற தலைப்புடன், அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு பின்னால் இருக்கும் படத்தை வைப்பார்கள்.
பொதுமக்களும் இந்த பிரசாரத்தில் இணைந்து, முகப்பு படத்தை மாற்ற வேண்டும். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.