தொடர் மின்வெட்டு எதிரொலியாக 'டிரான்ஸ்பார்மர்'கள் சீரமைப்பு

அரியாங்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு எதிரொலியாக ‘டிரான்ஸ்பார்மர்’கள் சீரமைக்கப்பட்டது..
தொடர் மின்வெட்டு எதிரொலியாக 'டிரான்ஸ்பார்மர்'கள் சீரமைப்பு
Published on

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் மின்துறை சார்பில் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலமாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டும் பராமரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு ஏற்பட்டது. நள்ளிரவு வரை இந்த மின்வெட்டு நீடித்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்றி பெரிதும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக நள்ளிரவில் அரியாங்குப்பம் புறவழிச்சாலை சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மின் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் அரியாங்குப்பம் பழைய பாலம் அருகே உள்ள 3 டிரான்ஸ்பார்மரில் பழைய மின் கம்பிகளை அகற்றி விட்டு, புதிய மின் கம்பிகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை அரியாங்குப்பம் மின்துறை இளநிலை பொறியாளர் லூர்து தலைமையில் ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் செய்தனர். இந்த பணிகள் முடிவு பெற்று இன்று பிற்பகல் முதல் அரியாங்குப்பம் பகுதியில் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com