டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. 4 மாடிகளை கொண்ட இந்த ஓட்டலில் 40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 60-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டு பரவத் தொடங்கியது.

இதையடுத்து, தீயணைப்பு படையினர், மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் குழந்தை உட்பட 17 பேர் பலியாகியுள்ளனர். காயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com