

ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநில கவர்னர் பல்ராம்ஜி தாஸ் தாண்டன். இவர் பா.ஜனதாவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். நேற்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. அவரது உடலுக்கு முதல்-மந்திரி ராமன் சிங் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், அவரது உடல் சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. பல்ராம்ஜி பஞ்சாப் துணை முதல்-மந்திரி உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 6 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். கவர்னரின் மறைவையொட்டி மாநிலத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று சுதந்திர தின விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றாலும், விருது வழங்குதலும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறாது என முதல்-மந்திரி ராமன்சிங் அறிவித்துள்ளார்.