குழந்தைகளுக்கு ஆபத்து என டாக்டர்கள் கூறிய பிறகும் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார்

குழந்தைகளுக்கு ஆபத்து என டாக்டர்கள் கூறிய பிறகும் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார், குழந்தைகள் நலமாக உள்ளது.
குழந்தைகளுக்கு ஆபத்து என டாக்டர்கள் கூறிய பிறகும் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார்
Published on

அயர்லாந்து நாட்டில் நான்கு பிள்ளைகளை கர்ப்பத்தில் சுமந்த பெண்ணிடம் அதில் இரண்டை கைவிட மருத்துவர்கள் வலியுறுதியதாக ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அயர்லாந்தின் Limerick மாவட்டத்தில் குடியிருந்து வருபவர் கிரேஸ் ஸ்லாம்டரி மற்றும் ஜெயிம்ஸ் என்ற தம்பதி. திருமணம் முடித்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் பிள்ளை செல்வம் இல்லாமல் தவித்துப் போன இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்ப்பமான கிரேஸ் மருத்துவ சோதனையில் நான்கு பிள்ளைகளை சுமப்பதாக தெரியவந்தது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது கிரேஸ் மற்றும் ஜெயிம்ஸ் தம்பதிக்கு. 17 வார கர்ப்பிணியாக இருந்த கிரேஸிடம் மருத்துவமனையில் வைத்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் மருத்துவர்கள்.

நான்கு குழந்தைகளில் இரண்டை கைவிட்டால் மட்டுமே எஞ்சிய இரண்டும் பிழைக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிரேஸ், மருத்துவர்களின் ஆலோசனையை புறந்தள்ளினார். அவரது நம்பிக்கை தற்போது நான்கு பிள்ளைகளுக்கு தாயாக மாற்றியுள்ளது. ஒருவருக்கு சிறு உடல் நலனில் குறைபாடு இருந்தது என்றாலும் தற்போது எஞ்சிய மூவரைப் போன்றே மிகவும் ஆரோக்கியமுடன் இருப்பதாக கிரேஸ் தெரிவித்துள்ளார். 2014 மே மாதம் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த கிரேஸ், தற்போது நால்வரும் பாடசாலை செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளனர் என பெருமை பொங்க தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com