எரிபொருள் மீதான கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும்: மோடிக்கு அசோக் கெலாட் வலியுறுத்தல்

எரிபொருள் மீதான கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் மீதான கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும்: மோடிக்கு அசோக் கெலாட் வலியுறுத்தல்
Published on

ஜெய்பூர்,

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் அடைந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியில் முறையே ரூ. 5-ம்,10 -ம் மத்திய அரசு குறைத்தது. மத்திய அரசு கலால் வரியை குறைத்ததும் பாஜக ஆளும் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன.

எனினும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரி எதுவும் குறைக்கப்படவில்லை. அந்த வகையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றும் வரும் ராஜஸ்தானிலும் வாட் வரி எதுவும் குறைக்கப்படவில்லை. வாட் வரியை குறைக்க வேண்டும் என்று ராஜஸ்தானில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், எரிபொருள் மீதான கலால் வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com