உ.பி. தேர்தல்: வாக்களிக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கில் ரூ.350 கழிக்கப்படுமா..?

உத்தர பிரதேச தேர்தலில் வாக்களிக்காவிட்டால் ரூ.350 இழக்க நேரும் என்ற தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 4-வது கட்ட தேர்தல் இன்று 59 தொகுதிகளில் நடக்கிறது. 5-ம் கட்ட தேர்தல் 27-ந்தேதி 61 தொகுதிகளிலும், 6-ம் கட்ட தேர்தல் மார்ச் 3-ந்தேதி 57 தொகுதிகளிலும், 7-வது கடைசி கட்ட தேர்தல் மார்ச் 7-ந்தேதி 54 தொகுதிகளிலும் நடக்க உள்ளது.

இந்த நிலையில் உ.பி. தேர்தலில் வாக்களிக்க தவறுகிறவர்கள், அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350-ஐ இழக்க நேரிடும் என்று தகவல்கள் பரவி, புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதை பத்திரிகை தகவல் தொடர்பகம், அப்பட்டமாக தவறான தகவல் என்று மறுத்துள்ளது. இதுபற்றி அது மேலும் கூறுகையில், தேர்தல் கமிஷன் இதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை பகிர வேண்டாம் என்று கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com