ரெயில் பயணி உயிரிழப்பு இல்லாத நிதி ஆண்டு - 166 வருடங்களில் இல்லாத சாதனை

ரெயில் பயணி உயிரிழப்பு இல்லாத நிதி ஆண்டாக, 166 வருடங்களில் இல்லாத சாதனை முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
ரெயில் பயணி உயிரிழப்பு இல்லாத நிதி ஆண்டு - 166 வருடங்களில் இல்லாத சாதனை
Published on

புதுடெல்லி,

இந்திய ரெயில்வேயில் நடப்பு நிதியாண்டில் எந்த ரெயில் விபத்திலும் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதிவரையிலான 11 மாத காலத்தில் எந்த ரெயில் விபத்திலும் ஒரு ரெயில் பயணி கூட உயிரிழக்கவில்லை. கடந்த 1853-ம் ஆண்டு ரெயில்வே சேவை அமலுக்கு வந்ததில் இருந்து 166 ஆண்டுகள் ஆகியுள்ளன. இத்தனை ஆண்டுகளில் இத்தகைய சாதனை நிகழ்த்தப்படுவது, இதுவே முதல்முறை ஆகும்.

எல்லா நிலைகளிலும் பாதுகாப்பை மேம்படுத்த ரெயில்வே துறை எடுத்துக்கொண்ட முயற்சிகளே இதற்கு காரணம். தண்டவாளம் புதுப்பித்தல், தண்டவாள பராமரிப்பு, சிக்னல்கள் பராமரிப்பு, பழைய பெட்டிகளை அகற்றி விட்டு, நவீன பெட்டிகளை இணைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களால்தான், இந்த மைல்கல் சாதனை சாத்தியமானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com