காஷ்மீரில் இருந்து மோடியை பார்ப்பதற்காக நடைபயணமாக டெல்லி வரும் வாலிபர்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் ஷாலிமர் பகுதியை சேர்ந்தவர் பகிம் நசிர் ஷா (வயது 28). பிரதமர் மோடி மீது மிகுந்த பற்று கொண்ட இவர், அவரை நேரில் பார்ப்பதற்கு பலமுறை முயன்றுள்ளார். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
காஷ்மீரில் இருந்து மோடியை பார்ப்பதற்காக நடைபயணமாக டெல்லி வரும் வாலிபர்
Published on

எனவே பிரதமரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் இருந்து டெல்லி நோக்கி நடைபயணம் தொடங்கி இருக்கிறார். சுமார் 815 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தில் 200-க்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவை கடந்து நேற்று உதம்பூரை அடைந்தார்.

அப்போது தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக வலைத்தளத்தில் அவரை நான் பின்தொடர்கிறேன். அவரது பேச்சும், செயலும் என் இதயத்தை தொட்டுள்ளன என்று கூறினார். கடந்த 2 ஆண்டுகளாக பிரதமரை சந்திக்க முயன்றும் முடியாமல் போகவே இந்த முறை கடினமான பயணத்தை தொடங்கியிருப்பதாக கூறிய நசிர் ஷா, இந்த முறை அவரை சந்திக்க முடியும் என நம்புவதாகவும், அப்படி சந்தித்தால் தனது கனவு நிறைவேறும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com