கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த பாஜக எம்.பி., நந்த்குமார் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த பாஜக எம்.பி., நந்த்குமார் இன்று உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா தொகுதி பாஜக எம்.பி., நந்த்குமார் சிங் சவுகான், குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். முன்னதாக அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பாஜக எம்.பி நந்த் குமார் சிங் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கந்த்வா தொகுதியைச் சேர்ந்த மக்களவை எம்.பி., நந்த்குமார் சிங் சவுகான் மறைந்ததில் வருத்தமடைந்துள்ளேன். பாராளுமன்ற நடவடிக்கைகள், நிறுவன திறன்கள் மற்றும் மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com