உ.பி: விவசாயக் கடன் தள்ளுபடியை நிதி ஆயோக் ஆதரிக்கிறது

உ.பி அரசின் சிறு/குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் பனாகரியா ஆதரித்து பேசினார்.
உ.பி: விவசாயக் கடன் தள்ளுபடியை நிதி ஆயோக் ஆதரிக்கிறது
Published on

லக்னோ

இதற்காக ஒதுக்கப்படும் நிதியைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த நடவடிக்கை கிராமப்புறத்திற்கு நன்மையையே தரும் என்றார் அவர்.

அதேசமயம் இந்தச் செயல் மட்டுமே கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தாது என்பது உண்மை என்றும் அவர் கூறினார். மாநில அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பனாகரியா விவசாயம் உ.பியின் இலக்கான 10 சதவீத வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றார்.

உ.பி மாநிலத்தைப் பற்றிய கருத்து ஆதித்யநாத் அரசு பதவிக்கு வந்த உடன் மாறியிருக்கிறது என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடியும் இம்மாநிலத்தின் முன்னேற்றத்தில் கவனம் கொண்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். டெல்லியை தவிர்த்து நிதி ஆயோக் தனது கூட்டத்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும். உ.பி மாநிலம் மக்கள் தொகை அளவில் உலகின் ஐந்தாவது இடம் என்பதால் அதனை யாரும் புறக்கணிக்க முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com