“இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதே எனது நோக்கம்” - ராகுல் காந்தி

அரசியலில் நடப்பதை பற்றி நேரம் வரும் போது விவாதிப்பேன் என செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதே எனது நோக்கம்” - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில், அவரது இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று கூடிப்பேசினர். இதில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உ.பி. சட்டசபை தேர்தல், அடுத்த நாடாளுமன்ற தேர்தல், 3-வது அணி அமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே கொரோனா தொற்று பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தியிடம், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பற்றி நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். ஆனால் அவற்றுக்கு பதில் அளிப்பதை ராகுல் காந்தி தவிர்த்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதுதான் எனது நோக்கம். நாங்கள் நினைக்கும் திசையில் அரசு செயல்படவேண்டும் என்று சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கம். எனவே இதில் இருந்து உங்களை அல்லது என்னை திசை திருப்ப மாட்டேன். அரசியலில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இங்கும், அங்கும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப்பற்றி விவாதிக்க ஒரு நேரம், இடம் உள்ளது. அப்போது உங்களிடம் பேசுவதில் மகிழ்ச்சி அடைவேன் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com