

புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் எல்லை மாவட்டமான பூஞ்சை சேர்ந்த முகம்மது தாஜ் என்பவரை கதீஜா பர்வீன் என்ற பெண் திருமணம் செய்துள்ளார். இவர் பாகிஸ்தானில் பிறந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்துள்ளதால், 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டப்பிரிவு 5ன் படி இந்திய குடியுரிமை சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய சான்றிதழை பூஞ்ச் மாவட்ட ஆட்சியர் இந்த பெண்ணிடம் ஒப்படைத்தார்.