இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை - பாகிஸ்தானில் தரையிறக்கம்...!

இந்தியாவில் இருந்து புறப்பட்ட கத்தார் விமானத்தில் நடுவானில் புகை வந்ததால் பாகிஸ்தான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
image courtesy: @qatarairways
image courtesy: @qatarairways
Published on

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கத்தார் தலைநகர் தோஹாவுக்கு கியூஆர் 579 என்ற விமானம் புறப்பட்டது. இதில் 100 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானிபில் பறந்து கொண்டிருந்த போது விமான சரக்கு வைக்கும் பகுதியில் இருந்து புகை வந்தது.

இதை தொடர்ந்து விமானிகள் அவசரநிலையை அறிவித்து பாகிஸ்தான் கராச்சிக்கு விமான நிலையத்தில் தரையிரங்க முடிவுசெய்தனர். பின்னர் கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

விபத்து தொடர்பாக விமான நிறுவம் கூறுகையில்,

இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பயணிகளை தோஹாவிற்கு அழைத்து செல்ல விமான நிறுவானம் ஏற்பாடு செய்து வருகிறது. எங்கள் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், அவர்கள் எங்கள் பயணத் திட்டங்களுக்கு உதவுவார்கள் என கத்தார் ஏர்வேஸ் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com