பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீதான குண்டர் சட்ட ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பவத்தில், 4 பேர் மீதான குண்டர் சட்ட ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீதான குண்டர் சட்ட ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
Published on

புதுடெல்லி,

பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி, தமிழகத்தை உலுக்கியது. இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்தது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com