

புதுடெல்லி
நிக்கோலாய் குடாஷேவ் எனும் தொழில்முறை ராஜதந்திரி இந்தியாவிற்கான புதிய தூதராக இருப்பார் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு ஆசியா விவகாரங்களில் நிபுணரான குடாஷேவ் தற்போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் செயலகத்தில் துணை பொது இயக்குநராக பதவி வகித்து வருகிறார். குடாஷேவ் மைக்ரோனேஷியா மற்றும் மார்ஷல் தீவுகளுக்கான தூதராக 2014-2015 ஆம் ஆண்டுகளில் பதவி வகித்து வந்தார்.
கடந்த முறை பதவி வகித்து வந்த தூதர் கடாகின் இறந்து ஏழு மாதங்கள் கழித்து புதிய தூதர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தி மொழியை சரளமாக பேசும் கடாகின் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் மரணமடைந்தார்.