ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி - ராகுல் காந்தி

யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் யு.ஜி.சி., வரைவு விதிகளை திருத்தம் செய்ய தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. யு.ஜி.சி., விதிகளை திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எம்.பி., கனிமொழி உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

ஒரே நாடு, ஒரே மொழி முறையைக்கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. பல மொழிகள் ஒன்றைணைந்ததுதான் இந்தியா. நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றை மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது என நான் கூறி வருகிறேன். வரலாறுகள், கலாசாரங்கள் மற்றும் மரபுகளை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம்.

அதற்கு துவக்கப்புள்ளி இதுதான். தங்களின் ஒரே வரலாறு ஒரே பாரம்பரியம் ஒரே மொழி என்ற ஒரே கொள்கையை கொள்கையை அமல்படுத்த விரும்புவதால் தான் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தங்களது கல்வி முறையை கொண்டு வருவதற்கான மற்றுமொரு முயற்சியே இது. அந்த அமைப்பால் நமது அரசியலமைப்பு, மாநிலங்கள் கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்றை மாற்ற முடியாது என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com