மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாக். பயங்கரவாதி தப்பி ஓட்டம், ஸ்ரீநகரில் ‘ரெட்’ அலார்ட்!

ஸ்ரீநகரில் மருத்துவமனையில் இருந்து பயங்கரவாதி தப்பி ஓடியதை அடுத்து தலைநகர் அதிஉயர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாக். பயங்கரவாதி தப்பி ஓட்டம், ஸ்ரீநகரில் ‘ரெட்’ அலார்ட்!
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அரசு மருத்துவமனையில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அங்கு சிகிச்சைக்கு வந்த பாகிஸ்தான் பயங்கரவாதி நாவீத்தை தப்பிக்க செய்தனர். இதனையடுத்து ஸ்ரீநகர் முழுவதும் பாதுகாப்பு அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பயங்கரவாதி தப்பி ஓடியது அங்கு பதட்டமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெட் அலார்ட் விடப்பட்டு உள்ளது என போலீஸ் கூறிஉள்ளது.

பயங்கரவாதி நாவீத் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் பகுதியை சேர்ந்தவன். பாகிஸ்தானில் அதிகமான போலீசார் கொல்லப்பட்டது மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டதில் தொடர்பு உடையவன். லஷ்கர் பயங்கரவாதியான அவனை தெற்கு காஷ்மீரில் போலீஸ் 2014-ம் ஆண்டு கைது செய்து ராய்னாவாரி சிறையில் அடைத்தது. பயங்கரவாதி நாவீத் திட்டமிட்டு தப்பிக்க செய்யப்பட்டு உள்ளான்,என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com