விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது - ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார் பிரேமலதா

2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது.
விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது - ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார் பிரேமலதா
Published on

புதுடெல்லி,

கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, பொறியியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு, விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கெளரவித்தார். அப்போது விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதினை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியிடம் இருந்து விருதினை வாங்கும்போது ஒரு நொடி மேலே பார்த்து பிரேமலதா கண் கலங்கினார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com