

திருப்பூர்,
இந்திய மருத்துவ கவுன் சிலுக்கு பதிலாக தேசிய மருத் துவ ஆணையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதற்கான மசோதாவை நிறை வேற்றி உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் முழு வதும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல செயல்பட்டன.
இந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங் கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத் தினார்கள். ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்ட தலைவர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டால் இப் போது உள்ள மருத்துவர்களுக் கும், மருத்துவ மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
மேலும் ஆங்கில மருத்துவம் பெருமளவில் பாதிக்கக்கூடிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்ப பெற வேண்டும். மாணவர்களின் மருத்துவ கனவை அழிக்க கூடிய நீட், நெக்ஸ்ட் தேர்வு களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கை வைத்தியங்களை சட்டபூர்வ மாக மாற்ற கூடாது. அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் உள்ள டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என் பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக் டர் செந்தில்குமார் கூறும் போது இன்று (நேற்று) காலை 6 மணி முதல் தொடங் கிய போராட்டம் நாளை (இன்று) காலை 6 மணிவரை தொடர்ந்து நடைபெறும். ஆனால் அவசர கால சிகிச்சைகளில் தடங்கல் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 150 மருத்துவமனைகளில் பணியாற்றும் 600-க்கு மேற் பட்ட டாக்டர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்தில் பங்கேற்று பல்லடத்தில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனை இயங்க வில்லை. ஆனால் அவசர நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது.