மந்திரி ‘டுவிட்டர்’ கணக்கில் மர்ம நபர் ஊடுருவல்

மந்திரி ‘டுவிட்டர்’ கணக்கில் மர்ம நபர் ஊடுருவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Published on

புதுடெல்லி,

டெல்லி சமூக நீதித்துறை மந்திரியாக இருப்பவர், ராஜேந்திர பால் கவுதம். இவர் தனது டுவிட்டர் கணக்கில் யாரோ ஊடுருவி (ஹேக்) சர்ச்சையை ஏற்படுத்தும் விதமான பதிவை வெளியிட்டு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

சட்டசபை தேர்தல் வரஇருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் மதரீதியான அடையாளங்களை எனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்கள். நான் ஒவ்வொருவரின் உணர்வையும் மதிப்பவன். இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com