திருச்சி,
திருச்சி கே.கே. நகரில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் வருவார். ரஜினியின் பெற்றோருக்காக ரசிகர்கள் திருச்சி கே கே நகரில் கட்டிய நினைவு மண்டபத்தை காண அவர் வருவார் என கூறினார்.