சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தளம் சார்பில் சென்னையில் இருந்து பூந்தமல்லி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர் வரையிலான 75 கி.மீ. தூரம் பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதற்கு காங்கிரஸ் சேவா தளத்தின் தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன் தலைமை தாங்கினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து சேவா தள நிர்வாகிகளின் பாத யாத்திரையை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதையடுத்து சேவா தள நிர்வாகிகளோடு அண்ணா சாலை தர்கா வரையிலும் கே.வி.தங்கபாலு நடந்து சென்றார். பாத யாத்திரையில் சுமார் 100 பேர் பங்கேற்றனர். சேவா தள நிர்வாகிகள் நாளை (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் சென்றடைகின்றனர்.