

அதன் அடுத்த கட்டமாக, உலகத்தில் உள்ள பிரபலங்களை, வனத்திற்குள் அழைத்துச் சென்று, அவர்களோடு சாகசங்களைச் செய்யும் சர்வைவல் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலுமே டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல ஹாலிவுட் திரை பிரபலங்களும், பியல் கிரில்சுடன் காட்டுப் பகுதியில் பயணித்து, அந்த அனுபவங்களை தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனும் இணைந்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு முழுவதும் மாலத் தீவு பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனில் ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.