என்ஜினீயர்களுக்கு வேலை

மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கணினி மேம்பாட்டு மையத்தில் (சி-டி.ஏ.சி) புராஜெக்ட் அசோசியேட், புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் மானேஜர் என 570 காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன
என்ஜினீயர்களுக்கு வேலை
Published on

பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் அல்லது அறிவியல் அல்லது கணினி தொடர்புடைய முதுகலைப்படிப்பு, பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு 30 வயதும், புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 35 வயதும், புராஜெக்ட் மானேஜர் பணிக்கு 50 வயதும், சீனியர் புராஜெக்ட் மானேஜர் பணிக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. பெங்களூரு, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, மொஹாலி, மும்பை, நொய்டா, புனே, திருவனந்தபுரம், பாட்னா, சில்சார், கவுகாத்தி போன்ற இடங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-2-2023.

https://www.cdac.in/ என்ற இணையப்பக்கத்தில் மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com