

சி.எப். மோட்டோ இந்தியா நிறுவனம் பாரத் புகைவிதி 6-க்கு ஏற்ற வகையிலான புதிய 650 சி.சி. மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சி.எப். மோட்டோ 650 என்.கே. விலை சுமார் ரூ.4.29 லட்சம். 650 எம்.டி. விலை சுமார் ரூ.5.29 லட்சம். 650 ஜி.டி. விலை சுமார் ரூ.5.59 லட்சம் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் சாலைப் பயணத்தை விரும்புவோருக்கு ஏற்றதாக சி.எப். மோட்டோ 650 என்.கே. உருவாக்கப்பட்டுள்ளது.
சாகச பயணங்களை விரும்புவோருக்கு ஏற்றதாக 650 எம்.டி. வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணங்களைத் தேர்வு செய்வோருக்கேற்றதாக 650 ஜி.டி. உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாடல் களுமே 649.3 சி.சி. திறன் கொண்டது. இது 56 ஹெச்.பி. திறன் 54 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய பி.எஸ். 4 மாடலை விட 650 எம்.டி. மாடலின் விலை ரூ.30 ஆயிரம் அதிகமாகும்.
இது 56 ஹெச்.பி. திறனை 8,250 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 54.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். மோட்டோ 650 எம்.டி. மாடல் சாகச பயணத்துக்கேற்ப நீளமான சஸ்பென் ஷனைக் கொண்டுள்ளது. மேலும் இதன் உயரமும் (கிரவுண்ட் கிளியரன்ஸ்) சற்று அதிகமாகும்.
இதில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, தேவைக்கேற்ப சரி செய்யும் வகையிலான விண்ட் ஸ்கிரீன், ஸ்டைலான ஹேண்ட்பார் ஆகியன உள்ளன. ஒரே நீளமான பின் பகுதியில் குறுகிய வடிவில் இதன் இருக்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. 650 ஜி.டி. மாடலைப் பொறுத்த மட்டில் இரண்டு முகப்பு விளக்குகள் உள்ளன.
இதில் 5 அங்குல டி.எப்.டி. டிஜிட்டல் இன்ஸ்ட் மென்ட் திரை உள்ளது. யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வசதியும் கொண்டது. இத னால் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து கொள்ளமுடியும்.