சமையல் அறையை அலங்கரிக்கும் செப்பு நாணயங்கள்

சமையல் அறையை விதவிதமாக அழகுபடுத்த ஆசைப்படும் பெண்கள் மத்தியில் மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டவர், பில்லி ஜோ வெலஸ்பி. இங்கிலாந்தின் பர்ன்லி பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் இவர், தன்னுடைய சமையல் அறையை செப்பு நாணயங்களால் அலங்கரித்திருக்கிறார்.
சமையல் அறையை அலங்கரிக்கும் செப்பு நாணயங்கள்
Published on

அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார்.

''என் அழகு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் நாணயங்கள் வழங்குவதுண்டு. அவற்றுள் செப்பு நாணயங்கள் அதிகமாக சேர்ந்தன. அவற்றை பாதுகாக்க விரும்பினேன். அது அலங்காரமாகவும் அமைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என் விருப்பத்தை பூர்த்தி செய்யும் இடமாக சமையல் அறை அமைந்தது. சமையல் அறையின் சுவற்றில் நாணயங்களை ஒவ்வொன்றாக ஒட்டினேன். அது பார்க்க அழகாக தெரிந்தது.

இதையடுத்து சமையல் அறையின் வடிவமைப்பை மொத்தமாக மாற்ற விரும்பினேன். நான் நினைத்தபடியே சமையல் அறை அழகு வடிவம் பெற்றுவிட்டது. இந்த அலங்கார வேலைப்பாட்டுக்கு 7,500 செப்பு நாணயங்களை பயன்படுத்தி இருக்கிறேன்.

இந்த பணியை செய்து முடிப்பதற்கு ஒரு மாதம் ஆனது. இந்த சுவர் அலங்காரம் செய்வதற்கு 75 பவுண்ட் மதிப்புள்ள பணத்தை செலவிட்டிருக்கிறேன்'' என்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com