தினம் ஒரு தகவல் : யூகலிப்டஸ்

யூகலிப்டஸ் மரங்களில் மொத்தம் 700 இனங்கள் உள்ளன. யூகலிப்டஸ் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஆன்டிசெப்டிக் எண்ணெயானது மருத்துவ குணம் கொண்டது.
தினம் ஒரு தகவல் : யூகலிப்டஸ்
Published on

யூகலிப்டஸ் இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பதால் ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொண்டை புண், தொண்டை வறட்சிக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். நுரையீரல், மூச்சுக்குழாய் போன்ற பகுதியில் இருந்து சளி மற்றும் இன்னும் பிற கழிவுகளை அகற்றுவதற்கு பயன்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது இந்த தைல எண்ணெய் நுரையீரலில் உள்ள சளியை மெலிதாக்கி அகற்ற உதவுவதாக கூறுகிறார்கள்.

யூகலிப்டஸ் இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறந்த வலி நிவாரணியாக உள்ளதாகவும் ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

தசை பிடிப்பு, மூட்டு வாதம், கழுத்து மற்றும் இடுப்பு வலி, சுளுக்கு போன்றவைக்கும் யூகலிப்டஸ் தைலம் உதவுகிறது. மூக்கடைப்பை போக்க யூகலிப்டஸ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. மேலும் மூக்கிலுள்ள ரத்த குழாய்களை குறுக்கி வீக்கம் மற்றும் அழற்சியை குறைப்பதன் மூலம் மூக்கடைப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்க செய்கிறது. இதனால் காற்றோட்டம் எளிதாக இருப்பதால், சளி வெளியேற உதவுகிறது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த எண்ணெயை தவிர்ப்பது நல்லது. காய்ச்சலை போக்கவும், உடல் வெப்பத்தை குறைக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. யூகலிப்டஸ் எண்ணெயை காய்ச்சல் எண்ணெய் என்றும் அழைக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com