

சித்தா (112), ஆயுவேதா (5), ஹோமியோபதி (13), யுனானி (8), யோகா மற்றும் இயற்கை மருத்துவம் (35) என மொத்தம் 173 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவ படிப்புகளை முடித்தவர்களாகவும், பொதுப்பிரிவினர் 35 வயதுக்குட்பட்டவர்களாகவும், இதர பிரிவினர் 58 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2021. மேலும் விரிவான விவரங்களை http://mrbonline.in/ என்ற இணைய பக்கத்தில் பார்வையிடலாம்.