

ஜூனியர் அசிஸ்டெண்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், மெஸ் ஹெல்பர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 388 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியின் தன்மைக்கு ஏற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பணி சார்ந்த அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 10-3-2023 அன்றைய தேதிப்படி 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு வயது வரம்பு 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூரில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-3-2023.
விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://www.jnu.ac.in/career என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.