வெப்ப மண்டல நாடுகளின் சிறப்புகள்

உயிர்களின் வளர்ச்சி நிலைகளில் பருவகாலங்களும் தட்பவெப்பமும் முக்கிய பங்காற்றுகின்றன. பூமிப்பந்து, வட்டமான கோளமாக இல்லாமல் ஒரு நீள்வட்ட வடிவான கோளமாக உள்ளது. இதன் நடுப்பகுதியை நாம் ஒரு கற்பனைக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கிறோம்.
வெப்ப மண்டல நாடுகளின் சிறப்புகள்
Published on

பூமிப்பந்து ஒரு நீள்வட்ட வடிவில் உள்ளது. இதன் நடுப்பகுதியை நாம் ஒரு கற்பனை கோட்டால் 2-ஆக பிரிக்கிறோம். அதன் பெயர் நிலநடுக்கோடு அல்லது பூமத்திய ரேகை.

இந்த கோட்டின் தென்பக்கமும் வடபக்கமுமாக பூமி பிரிக்கப்படுகிறது. தென் அரைக்கோளம், வட அரைக்கோளம் என்பது இவற்றின் பெயர். அதாவது கடகரேகை, மகர ரேகை.

சூரியன் மகரத்தில் தொடங்கி, கடகத்தில் முடிவதும் பின் திரும்ப கடகத்தில் தொடங்கி மகரத்தில் முடிவதும் தொடர் நிகழ்வு. இதனால் பருவ காலங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. அடிப்படையில் பூமிப்பந்தின் இயற்கை அமைப்பை செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பின்வருமாறு வகுக்கலாம். முதலில் அடர்ந்த காடுகளை கொண்ட நிலநடுக்கோட்டு பகுதி.

உலகத்தின் முக்கியமான காடுகள், பூமியின் நுரையீரல்கள் என்று சொல்லப்படுகின்றன. அமெரிக்க கண்டத்தின் அமேசான் காடுகள், ஆப்பிரிக்க கண்டத்தின் காங்கோ காடுகள், தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ காடுகள், ஆசியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் பான்றவற்றை குறிப்பிடலாம்.

அதற்கடுத்தாற்போல் அதாவது காடுகளைவிட்டு நகர்ந்து சென்றால் புல்வெளிகள் அமைந்துள்ளன. புல்வெளிகளுக்கு அப்பால் ஊசியிலைக்காடுகள் உள்ளன. அதற்கு அடுத்த பகுதி பூமியின் இரு முனைகளான ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகள்.

இந்த பூமி அமைப்பில் வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள நாடுகளுக்கான சிறப்புகள் என்னவென்றால், நல்ல மழையும் நல்ல வெயிலும் கிடைக்கிறது. அதனால் மரங்கள், செடிகள் நிறைந்து செழித்து காணப்படுகின்றன. இதனால் கால்நடைச்செல்வம் அதிகம் உள்ளது. உண்மையில் இயற்கை வளங்கள் நிறைந்த செல்வச் செழிப்பான பகுதியாக வெப்ப மண்டல நாடுகளே அமைந்துள்ளன. ஆனால், இப்போது பணக்கார நாடுகளின் பட்டியலில் வெப்ப மண்டல நாடுகள் மிகக் குறைவாகவே உள்ளது வதனை தருவதாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com