பாறை வீடுகள்

கோடை, குளிர் காலத்தில் நிலவும் வானிலை மாறுபாடுகளுக்கு ஈடு கொடுத்து வாழ வேண்டிய அவசியம் ஸ்பெயினில் உள்ள ஸ்டெனிஸ் நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு இல்லை.
பாறை வீடுகள்
Published on

வீ ட்டின் மேற்பரப்பில் அமைக்கப்படும் கூரைகள் இப்போது கான்கிரீட் மயமாகிவிட்டன. வெப்பமான காலங்களில் கடும் வெப்பத்தையும், குளிர் காலங்களிலும் ஓரளவு வெப்பத்தையும் உமிழ்கின்றன. குளிரை விட வெப்பத்தை விரைவாக கடத்தும் தன்மையை கொண்டிருப்பதால் குளிர் காலத்தில் குளிர்ச்சியை உணர்வதற்கு காலதாமதமாகும்.

இப்படி கோடை, குளிர் காலத்தில் நிலவும் வானிலை மாறுபாடுகளுக்கு ஈடு கொடுத்து வாழ வேண்டிய அவசியம் ஸ்பெயினில் உள்ள ஸ்டெனிஸ் நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு இல்லை. அங்குள்ளவர்கள் வசிக்கும் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகளாக பாறைகள் அமைந்திருக்கின்றன.

மலை முகடுகளுக்குள் வீடுகளை கட்டி அங்கு வசிக்கிறார்கள். வீட்டின் மேற்கூரைகள் பாறைகளாக இருப்பதால் கோடை காலத்தில் வெப்ப தாக்கம் குறைந்து குளிர் சூழலை உணர்கிறார்கள்.

குளிர்காலத்தில் மிதமான வெப்ப சூழலை அனுபவிக்கிறார்கள். வெப்பம், குளிர்ச்சி ஊடுருவலை தடுக்கும் வண்ணம் பாறைகள் அமைந்திருப்பதுதான் அதற்கு காரணம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com