

இது ஐக்கிய நாடுகள் சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயரை சூட்டியவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆவார். இந்த சபையின் முதல் கூட்டம் கடந்த 1946-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது.
ஐ.நா. சபைக்கு ஒரு நாடு அதிகபட்சமாக 5 பிரதிநிதிகளை அனுப்பலாம். நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா. சபையானது பொதுச்சபை, பாதுகாப்பு சபை, பொருளாதார சபை, பொறுப்பாண்மை குழு, சர்வதேச நீதிமன்றம், செயலகம் ஆகிய 6 உள் அமைப்புகளை கொண்டது. இதில் சுய ஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனை பாதுகாக்க பொறுப்பாண்மை குழு அமைக்கப்பட்டது. இந்த சபை ஆண்டுக்கு 2 முறை கூடுகிறது. மேலும் சபை மாநாடு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதன் செயலரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் 1 ஆண்டு மட்டுமே. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள திஹேக் பகுதியில் உள்ளது. இதில் 15 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இவர்களது பதவிக்காலம் 9 ஆண்டுகள்.
இந்த சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை உள்ளன. இந்தியா உள்பட பிற நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஐ.நா. சபையின் பணி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது ஆகும்.