இந்தோ-திபெத் போலீஸில் காலிப்பணியிடங்கள்

இந்திய எல்லை பாதுகாப்பு படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் போலீஸில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 7 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தோ-திபெத் போலீஸில் காலிப்பணியிடங்கள்
Published on

இந்தோ திபெத்திய பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி) படையில் 248 தலைமை காவலர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10-வகுப்பு, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகள் விரைவாக தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

உடல் திறன் சோதனை, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-7-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய மேலும் விரிவான விவரங்களை https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com