இருதரப்பினருக்கிடையே தகராறு; 6 பேர் கைது

இருதரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருதரப்பினருக்கிடையே தகராறு; 6 பேர் கைது
Published on

திருவள்ளூர் வள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவரது வீட்டுக்கு பக்கத்தில் காலியிடம் உள்ளது. அந்த இடம் சம்பந்தமாக ஜான்சனுக்கும் பக்கத்தில் வசிக்கும் பாரதி என்பவருடைய குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலை பாரதி அந்த காலி இடத்தில் சென்று அங்கிருந்த முட்செடிகளை பிடுங்கி கொளுத்திக்கொண்டிருந்தார். அதை பார்த்த ஜான்சன் பாரதியிடம் அது குறித்து கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பாரதியின் உறவினர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று ஜான்சன், விக்டர், மேரி, பமிளா ஆகியோரை தகாத வார்த்தைகள் பேசி கையாலும், கட்டையாலும், கத்தியாலும் தாக்கிவிட்டு அனைவரையும் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்த அனைவரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று தண்ணீர்குளம் பகுதியை சேர்ந்த ஆதித்யன் (25), அரவிந்தன் (23), திருவள்ளூர் காக்களூர் சாலையை சேர்ந்த கோகுல் என்ற கொடியரசு (26), வள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்த சித்தார்த்தன் (29) உள்பட 6 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com