

சென்னை,
சென்னை- மதுரை எழும்பூர் இடையே சென்றுவரும் தேஜஸ் ரயில் மதுரையில் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் மட்டும் நின்று சென்றது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் தேஜஸ் ரயிலில் சென்னைக்குப் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்றுசெல்ல வேண்டும் என வர்த்தகர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மதுரை- சென்னை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.