

கடையம்:
கடையம் அருகே உள்ள தேரணமலை முருகன் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மலை அடிவாரத்தில் உள்ள வல்லப கணபதிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் முதலில் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, பின்னர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்தை எழுப்பியவாறு கிரிவலம் வந்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.