வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முற்றுகை போராட்டம்

வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முற்றுகை போராட்டம்
Published on

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியதை கண்டித்து நேற்று நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சென்னை மண்டல தலைவர் ஓ.எம்.பக்கீர் முகமது தலைமையில் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் அருகே நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் ஏ.காலித் முகமது, மாநில செயலாளர் எம்.நாகூர் மீரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக தென் சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக் வரவேற்றார். முடிவில், தென்சென்னை மாவட்ட செயலாளர் முகைதீன் அன்சாரி நன்றி கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அமலாக்கத்துறை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com