

சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் (27). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மகன் உமாபதி (3). இந்த நிலையில் நேற்று முன்தினம் உமாபதி அந்த பகுதியில் உள்ள நாகராஜ் என்பவரது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.