வீட்டுமனை பிரிப்பதில் தகராறு: போலீஸ் நிலையத்தில் திரண்டவர்களால் பரபரப்பு

வீட்டுமனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீஸ் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டுமனை பிரிப்பதில் தகராறு: போலீஸ் நிலையத்தில் திரண்டவர்களால் பரபரப்பு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமத்தில் நரிக்குறவர் குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் அந்த பகுதியில் குடிபெயர்ந்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளடைவில் அந்த பகுதி நரிக்குறவ உறுப்பினர்கள் அதிகரித்த நிலையில் அவர்கள் வசிக்க வீடு கட்ட இடம் இல்லாததால் அந்த பகுதியில் வசிக்கின்ற நரிக்குறவர்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள காலி இடத்தை புதிய நரிக்குறவ குடும்பத்தினர்களுக்கு வீட்டு மனைகளாக பிரித்து தர அந்த பகுதி நரிக்குறவ பெரியவர்களால் முடிவு செய்யப்படதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மற்றொரு நரிக்குறவ தரப்பினர் அந்த இடத்தில் வீட்டுமனைகள் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை பிரித்து கொடுக்க அங்கு சென்றுள்ளனர். வீட்டுமனைகளை பிரிக்க கூடாது என மற்றொருதரப்பினர் ஏதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த சரத்குமார் (வயது 30) என்பவரது வீட்டுக்குள் புகுந்து அவரது வீட்டில் உள்ள பொருட்களை உடைத்தும் சரத்குமாரை தாக்கியும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சரத்குமாருக்கு கை எலும்பு முறிந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த நரிக்குறவர்கள் ஒன்றாக திரண்டு வந்து சரத்குமாரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com