அரசாணையில்லாமல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை ‘சட்டவிரோதமாக கருதலாம்’ நீதிபதிகள் கருத்து

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு ஜனவரி 12-ம் தேதி அரசிதழில் அரசாணை பிறப்பித்து உள்ளது. Jallikattu #HighCourt
அரசாணையில்லாமல் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை ‘சட்டவிரோதமாக கருதலாம்’ நீதிபதிகள் கருத்து
Published on

சென்னை,

2018-ல் ஆண்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சட்டவிரோதமாக கருதலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு நடத்த அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் ஜல்லிக்கட்டு அரசாணையில் 2017-ம் ஆண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018-ல் ஆண்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை சட்டவிரோதமாக கருதலாம் என கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் நடப்பாண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு ஜனவரி 12-ம் தேதி அரசிதழில் அரசாணை பிறப்பித்து உள்ளது.

மதுரையில் மூன்று இடங்களில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கனவே அரசாணை பிறப்பித்து உள்ளது. மதுரை ஐகோர்ட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பான அரசாணை இன்று விசாரணையின் போது தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் நீதிபதிகள் சட்டவிரோதம் என கருத்து தெரிவித்து உள்ளனர். தமிழக அரசின் அரசாணை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் சிராவயல், கண்டிப்பட்டி மற்றும் பெரம்பலூர் அரசலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com