மன்னார்குடி ரெயில் நிலையத்தில் சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகளுக்கு வரவேற்பு

தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகளுக்கு மன்னார்குடி ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மன்னார்குடி ரெயில் நிலையத்தில் சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகளுக்கு வரவேற்பு
Published on

மன்னார்குடி:

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த மகளிர் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெள்ளி பதக்கம் வென்றது. தமிழ்நாடு அணியில் விளையாடி வெற்றி பெற்ற மன்னார்குடி சவளக்காரன் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நா.இனியா, சி.ஆசிகா ஆகியோர் நேற்று சொந்த ஊர் திரும்பினர். சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு மன்னார்குடி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரைஅருள்ராஜன், சவளக்காரன் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமாருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com